காஞ்சிபுரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இருக்கும் தனியார் காப்பகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் களியாம்பூண்டி கிராமத்தில் தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. அங்கு, 37 சிறுவர்கள் மற்றும் ஆறு பணியாளர்கள் என 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆகியோர் பிபிஇ (PPE) கிட் பாதுகாப்பு உடையணிந்து, சிகிச்சைப் பெற்றுவருபவர்களிடம் நலம் விசாரித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், 43 பேருக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.