முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனா தடுப்பு பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.100 கோடியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை பெறும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தொற்று பரவலை தடுப்பதற்காக கடந்த மே மாதம் 10ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின், கொரோனா பரவல் படிப்படியாக குறையத்தொடங்கியதையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, கொரோனா நோய் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் திரவ மருத்துவ ஆக்சிஜன் வாங்குவதற்காகவும், தொற்றின் மூன்றாம் அலையை கட்டுப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காகவும் ரூ.100 கோடியை தமிழக முதலமைச்சர் ஒதுக்கி அதற்கான அரசாணையும் வெளியிட்டுள்ளார்.

மேலும் கொரோனா தடுப்பு நிதிக்காக இதுவரை ரூ.353 கோடி ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் பெறப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

திட்டமிட்டப்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் : சத்யபிரதா சாகு

Ezhilarasan

2-வது கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர்!

கொரோனா 2ம் அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள்!