முக்கியச் செய்திகள் தமிழகம்

“தூத்துக்குடியில் நிலக்கரியை காணவில்லை”

வடசென்னையை தொடர்ந்து தூத்துக்குடியிலும் நிலக்கரியை காணவில்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டார்.

சட்டப்பேரவையில் மின்சாரத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என சொல்லும் முந்தைய ஆட்சியாளர்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூட முழுமையாக மின் இணைப்பு வழங்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் 2011-16ம் ஆண்டு 82,000 விவசாய இணைப்புகளும், 2016-2021ம் ஆண்டில் 1.38 லட்சம் விவசாய மின் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், இலக்கு நிர்ணயிக்கப்பட்டதை விட குறைவான மின் இணைப்புகள் வழங்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.

2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அனல்மின் நிலையங்கள் மூலம் 85 சதவிகிதமாக இருந்த மின் உற்பத்தி, அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2016 ல் 78 சதவிகிதமாக குறைந்தது, பின்னர் 2016 முதல் 2021 வரை 58 சதவிகிதமாக குறைந்ததாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தனியாரிடம் மின்சாரத்தை வாங்குவதற்காகத்தான் மின் உற்பத்தி குறைக்கப்பட்டதோ என்ற ஐயம் எழுவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டார்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் வெளிமாநிலங்களில் மின்சாரம் வாங்குவதில் குறுகிய கால ஒப்பந்தம் போடாமல் 25 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பிய அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் வெளியில் 7 ரூபாய் 1 பைசாவுக்கு வாங்கிய மின்சாரத்தை, தமிழ்நாடு எரிசக்தி கழகம் மூலமாகவே 2 ரூபாய் 61 பைசாவுக்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். வரும் காலத்தில் அனல் மின் நிலையங்கள் மூலமாக மின் உற்பத்தியை பெருக்குவதே அரசின் இலக்கு எனவும் அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலுரையில் தெரிவித்தார்

வடசென்னையை தொடர்ந்து தூத்துக்குடியிலும் நிலக்கரியை காணவில்லை என குற்றம்சாட்டிய அமைச்சர் செந்தில் பாலாஜி, வட சென்னையில் 2,37,437 மெட்ரிக் டன் நிலக்கரி காணவில்லை என்றும், தூத்துக்குடியில் ஆய்வு செய்த போது அங்கு 71,857 மெட்ரிக் டன் நிலக்கரியை காணவில்லை என தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

நாடு முழுவதும் ஒரே நாளில் 42,766 பேருக்கு கொரோனா

Halley karthi

குருவாயூர் கோயில் யானை வலிய மாதவன்குட்டி மரணம்

Gayathri Venkatesan

தேர்வில் சினிமா பாடல் எழுதிய மாணவன்; ஆசிரியர் கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை

Saravana Kumar