ஆன்லைனில் மதுவிற்பனை செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி கள்ளச் சாராயம் காய்ச்சுதல் மட்டுமல்ல, மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களுக்கும் மறுவாழ்வு நிதி வழங்கப்படும் என குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மது அருந்துதல் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதலுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்றும் மின் ஆளுமை நடவடிக்கைகளின் கீழ் 74 சேவைகள் இணையவழி மூலம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்தார்.
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், தமிழ்நாடு மாநில வாணிபக்கழக சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு மாத தொகுப்பூதியம் 500 கூடுதலாக வழங்கப்படும் என்றும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.