கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் மேலாண்மைத்துறை சார்பில் காவிரி ஆற்றின் வெள்ளப் பெருக்கு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்டம் முழுவதும் உள்ள பொது மக்களுக்கு முறையாகக் குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என் அறிவுறுத்தப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் அவர் பேசுகையில், அரசு நிதிகளைக் கொண்டு கரூரில் முதன் முறையாகப் புத்தகத் திருவிழா வரும் 19ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை 11 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 100 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற இருக்கின்றன. புத்தகக் கண்காட்சி காலை 10 மணிக்குத் துவங்கி இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது என்று கூறினார்.
மேலும், கரூர் மாநகராட்சிக்குச் சொந்தமான, புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில் புத்தகத் திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பின், புத்தகக்கண்காட்சியில் இடம்பெறவுள்ள கலை நிகழ்ச்சிகளையும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்தும் பேசினார். மாலை 4 மணி முதல் 8 மணி வரை கலை நிகழ்ச்சிகளும், இரவு 8 மணி முதல் 10 மணி வரை சாலமன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி, சுகிசிவம் போன்ற சான்றோர்கள் பங்கு பெற்றுச் சிறப்பிக்க உள்ளதாகவும். குறிப்பாகப் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் புத்தகத் திருவிழாவில் பங்கு பெறப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்றார்.
1000 பேர் அமர்ந்து ரசிக்கக் கூடிய அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த கண்காட்சியில் 2 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.