முக்கியச் செய்திகள் உலகம் தமிழகம்

தமிழக முதலமைச்சர் தொடர்ந்து உதவ வேண்டும்-இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை

இலங்கையின் உணவு பொருள்கள் தட்டுபாடு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு
இயற்கை விவசாயத்தை முழுவதுமாக பயன்படுத்த அரசாங்கம் சொன்னது ஒரு காரணம்
என்றும், இலங்கை மக்களுக்கு தமிழக முதல்வர் செய்த உதவியை நாங்கள் என்றும்
மறக்க மாட்டோம் என்றும் இலங்கைவாழ் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை கிளிநொச்சி தமிழர்கள் நியூஸ் 7 தமிழ் வாயிலாக கேட்டுக்கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இலங்கையின் தற்போது உள்ள சூழல் குறித்தும் அவர்கள் பொருளதார நெருக்கடி எது
காரணம் என்றும் அங்குள்ள மக்களிடம் நாம் கேட்டோம். அப்போது அவர்கள்
கூறுகையில், இலங்கையின் வடக்கு பகுதிகள் முழுவதும் 80 சதவீதம் மக்கள் விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வேலையில் இலங்கையில் நஞ்சற்ற இயற்கை உணவை உற்பத்தி செய்யும் திட்டத்தை, கோத்தபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அமல்படுத்தியிருந்தது.
இதன்படி, விவசாய நிலங்களுக்கு செய்கை உர பயன்பாட்டை முற்றாக தடை செய்த
அரசாங்கம், இயற்கை உரத்தை பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், பெரும்போகத்தை ஆரம்பித்த விவசாயிகள், இயற்கை உரத்தை
பயன்படுத்த முயற்சித்த போதிலும், அது வெற்றியளிக்கவில்லை. இயற்கை உரம் கிடைக்காத அதேவேளை, செயற்கை உரத்திற்கு தடை விதித்தால், அதுவும் கிடைக்காமல் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்தாக தெரிவித்தனர் இலங்கையின் கிழிநொச்சி தமிழர்கள்.

மோகன் என்பவர் கூறுகையில், “விவசாய நடவடிக்கைகள் முற்று முழுதாக பாதிக்கப்பட்டு, பெரும்பாலான விவசாயிகள், வாழ்வாதாரத்தை கூட இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறும் தமிழர்கள், இதுவும் பொருளாதார நெருக்கடிக்கு மிக முக்கிய காரணம் என இலங்கை தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பிற்காலத்தில் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பொருட்களின் தட்டுபாடு ஏதும் வராமல் இருக்க அரசு விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

அதே வேளையில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மட்டும் உதவிகள் செய்யாமல்,
இலங்கையின் ஒட்டுமொத்த மக்களுக்கு உதவிகளைக் செய்த தமிழக முதல்வருக்கு எங்களது நன்றியைக் மனமார தெரிவித்து கொள்வதாக அங்குள்ள ஈழத்தமிழ் மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் – அமைச்சர் பெரியகருப்பன்

Jeba Arul Robinson

எதிர்க்கட்சினை மிரட்டவே அமலாக்கத்துறை சோதனைகள்- கே.எஸ்.அழகிரி

G SaravanaKumar

ஏழைகளின் மேம்பாடே அரசின் குறிக்கோள்: பிரதமர் மோடி

Halley Karthik