“அன்பில் மகேஷ் வழக்கில் ரூ.400 கோடி வரை முறைகேடு அதிர்ச்சியளிக்கிறது!” – வானதி சீனிவாசன்

அன்பில் மகேஷ் வழக்கில் ரூ.400 கோடி வரை முறைகேடு நட்ந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக பாஜக மூத்த தலைவர் வாந்தி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அனுமதி வழங்கும் விவகாரத்தில் ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடு செய்ததாக கூறி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் ஆடைக்கப்பட்டார். இந்த நிலையில் அன்பில் மகேஷ் முன் ஜாமின் கோரிய வழக்கு இன்று விசாரைணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், அது குறித்து அன்பில் மகேஷிடம் விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் சாதிட்டனர். அனைத்து தரப்பு வழக்கையும் விசாரித்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை நவ.10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவைட்டனர்.

இந்த நிலையில் அன்பில் மகேஷ் வழக்கில் ரூ.400 கோடி வரை முறைகேடு நட்ந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக பாஜக மூத்த தலைவர் வாந்தி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் மூலம் கடந்த கால திமுக அரசு பள்ளிக் கல்வித் துறையை பணம் கொழிக்கும் துறையாகவே மாற்றியிருந்திருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்குவதற்காகவே தனியார் பள்ளி ஒழுங்குமுறை விதிகளில் அரசாணையைத் திருத்தி வெளியிட்டதாகக் கூறப்படும் செய்தியும், சுமார் 40 லட்சம் முதல் 1 கோடி வரை டார்கெட் வைத்து ரூ.400 கோடி வரை முறைகேட்டில் செயல்பட்டதாகவும் மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினர் விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் செய்திகள் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது.

மாநில பட்ஜெட்டில் அதிகமாக நிதி ஒதுக்கப்படும் துறையான பள்ளிக் கல்வித் துறையில் மக்களின் வரிப்பணத்தினையும் தாண்டி, தனியார் பள்ளிகளிடம் வசூல் வேட்டை நடந்திருப்பதாகக் கூறப்படுவது கடந்த கால திமுக அரசின் ஊழல் லிஸ்ட்டில் யார் Top-க்கு வருவது என்று போட்டிபோட்டுக் கொண்டு செயல்பட்டது போல் தெரிகிறது. இந்த விவகாரத்தில் இன்னும் எத்தனைபேர் பின்னால் உள்ளனர் என்பதை CCB தீவிர விசாரணை நடத்தி அவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

அப்புறம், தற்போதைய தவெக அரசின் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களே..! நீங்கள் சொன்ன அந்த 5 கோடி புகார் என்னவாயிற்று?

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.