தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு கடந்த திமுக ஆட்சியின்போது, நிரந்தர அங்கீகாரம், பள்ளிகள் தரம் உயர்த்துதல் மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த செப்டம்பர் 16-ம் தேதி அன்பில் மகேஸ்க்கு சொந்தமான இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த அக் 26-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை போலீசார் கைது செய்து சிறப்பு நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர். அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அன்பில் மகேஸுக்கு நவம்பர் 26-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்தனர். இதனைத்தொடர்ந்து அன்பில் மகேஸ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே உயர்நீதிமன்றம் அனுமட்தியளித்ததை அடுத்து அன்பில் மகேஷ் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அன்பில் மகேஸ் தாக்கல் செய்திருந்த ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அன்பில் மகேஷ் தரப்பில் வழக்க்றிஞர், “அன்பில் மகேஷ் வீட்டில் கடந்த செப்டம்பர் 16-ந்தேதி போலீசார் சோதனை நடத்தினர். நேரிலும் அவர் போலீஸ் முன்பு விசாரணைக்கு ஆஜரானார். தற்போது 3 நாட்கள் காவலில் வைத்து விசாரித்தபோது, போலீசாரின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார். போலீசார் விசாரணைக்கு தேவைப்படும் அனைத்து ஆவணங்களும் கொடுக்கப்பட்டு விட்டன. அன்பில் மகேஷை செல்வாக்கான நபர் என்று போலீசார் கூறினாலும், அவர் எங்கும் தப்பிச் செல்ல போவது இல்லை” என்று வாதிட்டார்.
இதனையடுத்து காவல் துறை தரப்பு வழக்கறிஞர், “, அங்கீகாரம் கோரும் பள்ளிகளை தேர்ந்தெடுத்து அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்துள்ளனர். விஞ்ஞான ரீதியிலான ஊழல் நடந்துள்ளது. அன்பில் மகேஷ் மீதான வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டதல்ல. அவரை காவலில் எடுத்து விசாரித்ததில் புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கிடைத்துள்ள புதிய ஆதாரங்கள் குறித்து அன்பிலிடம் விசாரிக்க வேண்டியுள்ளது” என்றி வாத்திட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் அன்பில் மகேஷ் ஜாமின் கோரிய மனு மீதான தீர்ப்பு வருகிற 10-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.




