ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள்! 3 நாட்களுக்கு சிறப்புத் தொகுப்பு விற்பனை தொடக்கம்!

சிறப்புத் தொகுப்பு தமிழகம் முழுவதும் 218 கூட்டுறவு விற்பனை நிலையங்களில் விற்பனை, சென்னையில் 4 நடமாடும் வாகனங்கள் மூலமும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கும் வகையில், 10 வகையான காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்புக் காய்கறித் தொகுப்பு’ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான விற்பனையை கூட்டுறவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ் இன்று (நவம்பர் 5) தொடங்கி வைத்தார்.

ரூ.100-க்கு கிடைக்கும் 10 வகையான காய்கறிகள்!

இந்தச் சிறப்புத் தொகுப்பில் அன்றாட சமையலுக்குத் தேவையான 10 வகையான காய்கறிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றின் விவரங்கள்:

பெரிய வெங்காயம் – 500 கிராம்,

தக்காளி – 500 கிராம்,

கத்தரிக்காய் – 250 கிராம்,

உருளைக்கிழங்கு – 250 கிராம்,

கேரட் – 200 கிராம்,

பீன்ஸ் – 200 கிராம்,

பச்சை மிளகாய் – 100 கிராம்,

எலுமிச்சை – 100 கிராம்,

இஞ்சி – 50 கிராம்,

தேங்காய் – ஒன்று (400 முதல் 450 கிராம் வரை)

இந்த 10 வகையான காய்கறிகளும் அடங்கிய ஒரு தொகுப்பின் விலை ரூ.100 மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்கு கிடைக்கும்?

தமிழகம் முழுவதும் உள்ள 218 கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் இந்தச் சிறப்புக் காய்கறித் தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக 4 நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மூலமாகவும் விற்பனை நடைபெறுகிறது.

3 நாட்கள் மட்டுமே விற்பனை!

இந்தச் சிறப்புத் தொகுப்பின் விற்பனை நவம்பர் 5-ம் தேதி தொடங்கி நவம்பர் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. முக்கியக் குறிப்பு: ஒரு நபருக்கு ஒரு காய்கறித் தொகுப்பு மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.