மாணவிகளின் நலனுக்காக குரல் கொடுத்த அமைச்சர்

மதுரையில் அரசினர் பெண்கள் தொழிற்பயற்சி நிலையத்தில் மாணவிகளுக்காக கட்டப்பட்டுள்ள விடுதிக்கு செல்லும் பாதை மழைக்காரணமாக சேறும், சகதியுமாக உள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வருவதற்காக தற்காலிக பாலம் ஒன்று அமைக்கப்பட்டது.…

மதுரையில் அரசினர் பெண்கள் தொழிற்பயற்சி நிலையத்தில் மாணவிகளுக்காக கட்டப்பட்டுள்ள விடுதிக்கு செல்லும் பாதை மழைக்காரணமாக சேறும், சகதியுமாக உள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வருவதற்காக தற்காலிக பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. இதனை பார்த்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நாங்கள் வருவதற்கு தற்காலிக பாலம் அமைத்துவிட்டீர்கள். மாணவிகள் வருவதற்கு என்ன செய்துள்ளீர்கள் என கேள்வி மேல் கேள்வி கேட்டு அதிகாரிகளுக்கு டோஸ் விட்டார்.

மதுரையில் அரசினர் பெண்கள் தொழில் பயிற்சி நிலைய விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மழை நீர் தேங்கி உள்ளதால் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வருவதற்காக தற்காலிக மர பாலம் அமைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் எனக்காக பாலம் அமைத்தீர்கள், விடுதிக்கு மாணவிகள் எப்படி வருவார்கள் என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அதிகாரிகளிடம் சரியான பதில் எதுவும் இல்லை. இதனால் கடுப்பான அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கைக்கு உள்ளாவீர்கள் என எச்சரித்து விட்டு சென்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.