முக்கியச் செய்திகள் தமிழகம்

டிப்ளமோ நர்சிங் படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பபிக்கலாம்

மருத்துவம் சார்ந்த துணைநிலை படிப்புகளில் சேர இன்று முதல்  இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் 19 அரசுக் கல்லூரிகள், 4 சுயநிதி கல்லூரிகள் என 23 கல்லூரிகளில் துணை மருத்துவப் படிப்புகளுக்கான டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 19 அரசு கல்லூரிகளில் 2536 இடங்களும், 4 சுயநிதி கல்லூரிகளில் 22,200 இடங்கள் உள்ளன. இதில், 14,157 இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக உள்ளன. எனவே, தமிழகத்தில் துணை மருத்துவப் படிப்புகளுக்கான மொத்த அரசு இடங்களின் எண்ணிக்கை 16,693ஆக உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

டிப்ளமோ நர்சிங் படிப்பு 25 அரசு கல்லூரிகளில் உள்ளது. இதில் 2060 மாணவர்களுக்கான இடங்களும், இதர 27 துணைநிலை டிப்ளமோ படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்காக அரசு கல்லூரிகளில் 8596 இடங்களும் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, துணைநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக மட்டுமே மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் மட்டுமே 27,000 இடங்களுக்கு மேல் உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இன்று காலை 10 மணி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற ஆன்லைன் மூலம் http://www.tnhealth.tn.gov.in என்ற இனையதளம் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முகம் பார்த்திராத முகநூல் காதல்; காதலி இறந்ததால் காதலனும் உயிரிழப்பு

G SaravanaKumar

சசிகலாவிற்கு திடீர் மூச்சுத்திணறல்!

Niruban Chakkaaravarthi

திரைத்துறையின் முன்னோடிகளுக்கு சீனுராமசாமி மரியாதை

Web Editor