எம்.எல்.ஏ.வாக பதவியேற்காத அமைச்சர் கீர்த்தனா: காரணம் என்ன…?

அமைச்சர் கீர்த்தனா தனது வெற்றி சான்றிதழை கொண்டுவராததால் எம்.எல்.ஏ-வாக பதவியேற்கவில்லை

தமிழ் நாடு 17 வது சட்டமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் தற்காலிக சபாநாயகர் கருப்பையா அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

முதலாக முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏவாக பதவியேற்றார். தொடர்ந்து செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களாக பதவியேற்றனர். அதே போல உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்களும் எம்.எல்.ஏக்களாக பதவியேற்றனர்.

இதற்கிடையில் சிவகாசி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான கீர்த்தனா தனது வெற்றி சான்றிதழை கொண்டுவர மறந்துள்ளார். இதனால் பிற அமைச்சர்களுடன் அவரால் எம்.எல்.ஏ-வாக பதவியேற்க முடியவில்லை.

தொடர்ந்து வெற்றி சான்றிதழை எடுத்து வந்த பின் அவர் எம்.எல்.ஏவாக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.