தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த வாக்குகளில் மே 4 ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
தொடர்ந்து காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் அளித்துள்ள ஆதரவின் மூலம் அக்கட்சி பெரும்பான்மையையும் பெற்றது. இதனையடுத்து நேற்று தமிழ் நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். தொடர்ந்து 9 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றது.
முதலமைச்சராக பதவியேற்ற விஜய் பெரியார் திடலுக்கு சென்று தி.க. தலைவர் வீரமணியை சந்தித்தார். மேலும் அவர் பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து இன்று சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏவாக பதவியேற்றார்.
இந்த சூழலில் முதலமைச்சர் விஜய் மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன் படி முதலமைச்சர் விஜய், மதிமுக பொதுச்செயளாலர் வைகோவை அவரது இல்லத்தில் இன்று மாலை 3 : 30 மணிக்கு சந்திக்க உள்ளார்.
இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினையும் முதலமைச்சர் விஜய் நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்றக் கூட்டம் முடிந்தவுடன் மு.க. ஸ்டாலினை விஜய் சந்திப்பார் எனக் கூறப்படுகிறது







