வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் வடந்தியர்கள் ஹோலி பண்டிகையை நாடு முழுவதும் இன்று கொண்டாடிவருகிறார்கள்.
அன்பையும் நட்பையும் வலியுறுத்தும் ஹோலி பண்டிகை நாளில் பிரபல பாலிவுட் நடிகர்கள் பிரியங்கா சோப்ரா, மல்லிகா அரோரா மற்றும் நடிகர்கள் கரீனா கபூர், சைப் அலிகான் ஆகியோரின் மகன் தைமூர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் தங்களுடைய ஹோலி கொண்டாட்ட புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். பாலிவுட் பிரபலங்களில் ஹோலி படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது லண்டனில் தன்னுடைய கணவர் நிக் ஜோனாஸுடன் வசித்துவருகிறார். இந்நிலையில் பிரியங்கா ஹோலி கொண்டாட்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பகுதியில் வெளியிட்டுள்ளார். அதில் ‘உலக மக்கள் அனைவரும் ஹோலி வாழ்த்துக்கள், நமக்கு பிடித்தவர்களுடன் ஹோலி கொண்டாடுவோம், ஆனால் வீட்டில் கொண்டாடுவோம்’ என பதிவிட்டுள்ளார்.
அதேபோல் நடிகை மல்லிகா அரோரா தன்னுடைய ஹோலி கொண்டாட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் பிரபலங்கள் கரீனா கபூர், சைப் அலிகான் ஆகியோரின் மகன் தைமூர் புகைப்படம் ஒவ்வொரு ஆண்டு ஹோலி கொண்டாட்டத்தின் போதும் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு வெளியிடப்பட்ட படத்தில் தைமூர் கொஞ்சம் வளர்ந்து அழகான வண்ணங்கள் பூசி காணப்படுகிறார்.








