முக்கியச் செய்திகள் மழை

பாலை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை: அமைச்சர் நாசர்

மழையை காரணம் காட்டி கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் காணொலியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆவின் சேர்மன் கந்தசாமி மற்றும் அனைத்து மாவட்ட ஆவின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், கடந்த 2015ம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தின் போது, அதிக விலைக்கு பால் விற்பனை செய்ததை போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைப்பெறக்கூடாது என்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.சென்னையில் கூடுதல் விலைக்கு பாலினை விற்றதாக 10 கடைகளுக்கும், தஞ்சையில் ஒரு கடையும் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தேவைப்படும் பட்சத்தில் வாகனம் செல்லமுடியாத இடத்திற்கு படகில் சென்று பால் வினியோகம் செய்ய தயாராகவுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

டிரைவர் கட்டாயமில்லை… அறிமுகமானது எலக்ட்ரிக் டிராக்டர்!

Jayapriya

கூகுள் மேப் சேவைக்கு போட்டியாக களமிறங்கும் மேப் மை இந்தியா!

Jayapriya

மேற்கு வங்கத்தில் கல்விக் கடன் பெற மாணவர்களுக்கு கிரெடிட் கார்டு

Ezhilarasan