முக்கியச் செய்திகள் தமிழகம்

எம்.ஜி.ஆர் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது: ஜெயக்குமார்

எம்.ஜி.ஆர் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கே வந்திருக்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்ப்பேட்டையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன், எத்தனை காலத்திற்கு துரோகிகளைப் பார்த்துக்கொண்டிருப்பது என்று நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசினார்.

தொடர்ந்து, அண்ணா காலத்தில் ஈ.வெ.கி.சம்பத்தை பார்த்தோம், அடுத்து எம்.ஜி.ஆரைப் பார்த்தோம், பின்னர் கோபால்சாமியையும் பார்த்தோம். இனிமேல் அப்படி பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ஆகவே கட்டுப்பாட்டுடன் இருங்கள்” என்று தெரிவித்தார். இதற்கு அதிமுக மற்றும் மதிமுகவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சிவாஜி கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,  துரைமுருகனின் கருத்து தொடர்பாகவும் பேசினார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை சீண்டுவது நெருப்புடன் விளையாடுவது போன்றது என்ற ஜெயக்குமார், எம்.ஜி.ஆர் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கே வந்திருக்காது. கருணாநிதியை முதலமைச்சராக அடையாளம் காட்டியது எம்ஜிஆர் தான். திமுக கட்சி ஒரு துரோக கும்பல் என விமர்சித்தார்.

Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் வரும் 8-ம் தேதி வரை கருத்து கேட்பு!

Nandhakumar

குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு நாடகமாடிய சித்தி !

Vandhana

உலக வன தினம்; முதல்வர் பேச்சால் சர்ச்சை

Saravana Kumar