முக்கியச் செய்திகள் தமிழகம்

டெல்டா மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு

அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்தது. நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த மழையால் ஏரிகள் நிரம்பின.  தொடர்மழை காரணமாக கரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெருமபாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் 5ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் அநேக இடங்களில் மழை பெய்யும் எனவும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதீத கன மழைக்கு வாய்ப்பு என ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

12 ஆண்டுகளுக்கு பின்னர் நிரம்பிய அணைக்கட்டு; மக்கள் மகிழ்ச்சி

Halley karthi

புதுச்சேரி ஜிப்மரில் வரும் 15ம் தேதி முதல் வெளிநோயாளிகள் பிரிவு மூடல்

Saravana Kumar

கேரளா, மகாராஷ்டிராவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா

Halley karthi