முக்கியச் செய்திகள் தமிழகம்

நம் வெற்றி நமக்கானது அல்ல, சமூகத்துக்கானது: முதலமைச்சர் 

பிரச்னையைக் கண்டு ஓடாமல் அதை தீர்த்துவைக்க வேண்டும் என குடிமைப் பணி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, சென்னை பசுமை வழிச் சாலையிலுள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

2020-2021-ம் ஆண்டுக்கான குடிமைப் பணி தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து 36 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், அவர்களில் 26 பேர் நிகழ்வில் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர்.

பின்னர் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய ஆட்சிப் பணி என்பது எண்ணற்ற இளைஞர்களின் கனவாக உள்ளது.  மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக எளிய குடும்பங்களில் இருந்து வரும் இளைஞர்களுக்கு சுட்டுவிரலாக அமையும் வகையில், தமிழ்நாடு அரசால் அண்ணா மேலாண்மை நிலையம் நடத்தப்பட்டு வருகிறது. இட ஒதுக்கீடு முறையில் அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் இங்கு வாய்ப்பளிக்கப்படுகிறது என்றார்.


அரசின் திட்டங்கள், சட்டங்களை ஏழை – எளிய மக்களிடம் கொண்டு சேர்க்கும் மிகப்பெரிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது என குடிமைப் பணி அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய முதலமைச்சர், இது நுழைவு வாயில்தான், மாளிகை அல்ல. இனிதான் அதிகம் உழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும், நம் வெற்றி நமக்கானது அல்ல, சமூகத்துக்கானது. அதிகாரத்துக்கு வந்த உடன் அதிகார வர்க்கத்தில் உள்ளோம் என்று எண்ணக் கூடாது. நேர்மையாக பணியாற்ற வேண்டும், சிலர் தவறான வழிக்கு தூண்டினாலும் சபலத்துக்கு உட்படக் கூடாது. பிரச்னையைக் கண்டு ஓடாமல், அதை தீர்த்து வைக்க வேண்டும். பணியின் போது மக்களை நேசிப்பது முக்கியம் என்றும் அறிவுறுத்தினார் முதலமைச்சர்.

Advertisement:
SHARE

Related posts

அய்யா வைகுண்டரின் அவதாரத் திருவிழா: சென்னையில் ஊர்வலம்!

Halley karthi

அதிமுக கொடி கட்டிய காரில் தமிழகம் வருகிறார் சசிகலா

Nandhakumar

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடக்கும்

Halley karthi