மெட்ரோ ரயில் பணிக்காக வந்த லாரி மீது பைக் மோதி விபத்து – இளைஞர் உயிரிழப்பு!

மெட்ரோ ரயில் பணிக்காக வந்த லாரி மீது பைக் மோதி இளைஞர் உயிரிழந்தார். உடலை எடுக்க விடாமல் உறவினர் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (30).  இன்று அதிகாலை…

மெட்ரோ ரயில் பணிக்காக வந்த லாரி மீது பைக் மோதி இளைஞர் உயிரிழந்தார். உடலை எடுக்க விடாமல் உறவினர் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (30).  இன்று அதிகாலை அவருடைய உறவினர் ஒருவரின் இறப்பிற்காக செம்மஞ்சேரி வரை சென்று விட்டு தனது  இருசக்கர வாகனத்தில் நண்பர்கள் இருவருடன் வீடு திரும்பி கொண்டிருந்தார்.  அப்போது, கொட்டிவாக்கம் ஓ.எம்.ஆர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற மெட்ரோ ரயில் பணிக்காக கம்பிகளை ஏற்றிச் சென்ற லாரி மீது மோதியது.

இதையும் படியுங்கள்; இனி UPI பேமெண்ட் செய்து டிக்கெட் வாங்கலாம் | சென்னை பஸ்களில் புதிய வசதி வந்திருக்கு தெரியுமா…!

இதில் சம்பவ இடத்திலேயே விக்னேஷ் உயிரிழந்தார்.  நண்பர்கள் 2 பேரும் லேசான காயத்துடன் தப்பினர்.  அதனைத் தொடர்ந்து,  தகவல் அறிந்து விக்னேஷின் உறவினர்கள் அங்கு வந்து உடலை எடுக்க விடாமல் மறியலில் ஈடுபட்டனர்.  அதனால், அப்பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து,  தகவல் அறிந்து வந்த பரங்கிமலை காவல் துணை ஆணையர் சுதாகர் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.  பிறகு விக்னேஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், லாரி ஓட்டுநரை பிடித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.