கர்நாடகாவில் அழகு நிலையத்தில் திருமண மேக்கப் செய்து கொள்ள சென்ற பெண்ணுக்கு முகம் கறுத்து வீங்கி அலங்கோலமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள அரசிகெரே என்ற கிராமத்தில் பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்கு தயார் ஆகும் வகையில் அந்தப் பெண் அலங்காரம் செய்துகொள்ள அழகு நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்துக் கொண்ட நீராவி சிகிச்சைக்குப் பின் அவரது முகம் கறுத்து வீங்கிவிட்டது.
முகம் கறுப்பாகி, வீங்கிய நிலையில் இருந்த மணப்பெண்ணைப் பார்த்தது, மணமகன் திருமணத்தையே நிறுத்திவிட்டார். இதனை அடுத்து அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, அழகுநிலைய உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








