அமேசான் பே நிறுவனத்துக்கு ரூ.3.06 கோடி அபராதம்

விதிமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அமேசான் பே  நிறுவனத்துக்கு இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ரூ.3.06 கோடி அபராதம் விதித்துள்ளது. அமேசான் பே மூலம் ப்ரீ பேமென்ட் வசதி மூலம் முன்னதாகவே பணம் செலுத்தி பொருள்களை…

விதிமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அமேசான் பே  நிறுவனத்துக்கு இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ரூ.3.06 கோடி அபராதம் விதித்துள்ளது.

அமேசான் பே மூலம் ப்ரீ பேமென்ட் வசதி மூலம் முன்னதாகவே பணம் செலுத்தி பொருள்களை வாங்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் மற்றும் வாடிக்கையாளா் விவரங்கள் சேகரிப்பு (கேஒய்சி) தொடா்பான புகாா்களின் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஆா்பிஐ தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: கிரீஸில் ரயில் விபத்து: 2 ரயில்கள் மோதிக்கொள்ளும் பதைபதைக்க வைக்கும் CCTV காட்சிகள்

முன்னதாக, ரிசர்வ் வங்கி, அமேசான் பே இந்தியா நிறுவனத்துக்கு இந்தப் புகார்கள் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கூறி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இது தொடா்பாக அமேசான் நிறுவனம் அளித்த விளக்கம் ஆா்பிஐ-க்கு திருப்திகரமாக இல்லை. இதையடுத்து, விதிகளை மீறி செயல்பட்டதாக அமேசான் பே நிறுவனத்துக்கு ரூ.3.06 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நடவடிக்கை அமேசான் பே வாடிக்கையாளா்களை பாதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.