செய்திகள்

மாணவர்கள் மனநல ஆலோசனை பெற எண்கள் அறிமுகம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வருவதற்கும், அடுத்து என்ன படிக்கலாம் என்ற
ஆலோசனை பெறவும் 104 , 1100 என்ற எண்களை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை காய்கறிச் சந்தையில் மருத்துவம் மற்றும் மக்கள்
நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்
பேடி, மேயர் பிரியா, துணை மேயர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர்,
செய்தியாளர்களை சந்தித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், சைதாப்பேட்டை சந்தை வணிக வளாகம் வரலாற்று சிறப்புமிக்கது. 1000 கடைகள் வரை உள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இந்த தொகுதி மக்களுக்குப் பயனாக உள்ளது. சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள மக்கள் கூட இந்த சந்தைக்கு தான் வருவார்கள். நீண்ட நாட்களாக மழைக் காலங்களில் மக்கள் வருவதற்கும், வியாபாரிகளுக்கும் பிரச்சனையாக உள்ளது.
அதனால் சந்தையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுவரை
வியாபாரிகளுக்கு புது இடம் ஒதுக்கீடு செய்ய உள்ளார்கள்.

ஏற்கனவே இங்கு வியாபாரம் செய்தவர்களுக்கு மட்டும் இடம் ஒதுக்கப்பட்டு மீண்டும்
இங்கு சரி செய்யப்பட்டதும் இடம் தரப்படும். 1996 ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பு கடைகளுக்காக கட்டப்பட்ட கட்டிடத்தை அவர்கள் இப்பொழுது அதை பயன்படுத்தவில்லை. அது மகப்பேறு மருத்துவமனை அருகில் இருப்பதால் மருத்துவமனைக்கு தர வேண்டும் என்று மாநகராட்சியிடம் கேட்டுள்ளோம்.

2017 ஆம் ஆண்டு அதிமுக அரசு ஒப்புதல் அளித்து தொடர்ந்து 4 ஆண்டுகளாக நீட் தேர்வு
நடந்து வருகிறது. 1,45,988 பேர் நீட் தேர்வில் பங்கேற்றுள்ளனர். இத்தனை ஆண்டுகளில் இதுவே அதிகம். அதில் 17,517 பேர் அரசு சார்ந்த பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். Dms வளாகத்தில் உள்ள 50 மன நல ஆலோசகர்கள் உட்பட 110 ஆலோசகர்கள் கொண்டு மாணவர்களுக்கு மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அதில், 564 மாணவர்கள் அதிக மனஉளைச்சலில் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு தொடர்ச்சியாக ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட மன நல மருத்துவர்களும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இன்று 12 மணி அளவில் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

32 மாவட்டகளில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு
மன அழுத்தம் இருந்தால் அவர்களை இந்த குழுவை அணுகுங்கள். இதற்கான எண் மாவட்ட ஆட்சியர்கள் இடம் உள்ளது. மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வரவும், அடுத்து என்ன செய்யலாம் என்ற ஆலோசனையும் வழங்குவார்கள். 104 , 1100 என்ற எண்களை பயன்படுத்தி அவர்களைத் தொடர்பு கொண்டு தகுந்த ஆலோசனைகளை பெறலாம். குழந்தைகளை கடுமையாக நடத்தக் கூடாது. கவனமாக இருக்க வேண்டும்.
குழந்தைகள் தேர்ச்சி பெறவில்லை என்பதற்காக அவர்களை கடிந்து கொள்ள வேண்டாம் என்று சங்கடத்துடன் கேட்டுக் கொள்கிறோம்.

535 பேர் கடந்த ஆண்டு பயன்பாட்டார்கள் இட ஒதுக்கீடு இருக்கிறது. தேர்ச்சி
பெறுவதை பொறுத்து தான் ஒதுக்கீடு செய்யப்படும். நீட் தேர்வுக்காக
அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி தொடர்ந்து வழங்கப்படுகிறது. 6 மாவட்டங்களில் செவிலியர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. செவிலியர்களுக்கு டிமாண்ட் அதிகமாக உள்ளது. தனியார் கல்லூரியில் அதிக கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.
எதிர்காலத்தில் 32 மாவட்டங்களிலும் செவிலியர் பயிற்சி பள்ளிகள் அமைக்க கடிதம்
அளித்து கேட்டுக் கொண்டுள்ளோம்.

ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 இடங்களில் புதிதாக
மருத்துவக் கல்லூரி அமைக்க கேட்டுள்ளோம். உக்ரைனில் படித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் எந்த பல்கலைக்கழகத்தின் கீழ் படித்தார்களோ அவர்களின் பாடத்திட்டம் எந்த இடத்தில் உள்ளதோ அங்கு படித்தால் அதற்கு சான்றிதழ் உக்ரைன் தரும் என்று அதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் வழி மருத்துவக் கல்லூரி தேவைதான். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி
வர வேண்டும். முதலில் இந்த 6 மாவட்டங்களில் நடைமுறைக்கு வந்த உடன்
தண்டையார்பேட்டையில் தமிழ் வழி மருத்துவக் கல்லூரி அமைக்கவும் நடவடிக்கை
எடுக்கப்படும் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

படிப்பை தொடர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்; மாணவர்கள் கோரிக்கை

G SaravanaKumar

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நிலமோசடி வழக்கு ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Web Editor

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

G SaravanaKumar