மேல்மறைகாடார் கோயிலில் கும்பாபிஷேக பூர்த்தி நாள் சிறப்பு விழா!

வேதாரண்யம் அருகே உள்ள மேல்மறைகாடார் கோயிலில் ஓராண்டு கும்பாபிஷேக  நாளை முன்னிட்டு சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் தீபாராதனை  நடைபெற்றது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருள்மிகு மேல்மறைகாடார் கோவிலில் ஓராண்டு கும்பாபிஷேக பூர்த்தி நாளை…

வேதாரண்யம் அருகே உள்ள மேல்மறைகாடார் கோயிலில் ஓராண்டு கும்பாபிஷேக  நாளை முன்னிட்டு சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் தீபாராதனை  நடைபெற்றது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருள்மிகு மேல்மறைகாடார் கோவிலில் ஓராண்டு
கும்பாபிஷேக பூர்த்தி நாளை முன்னிட்டு  வேதநாயகி அம்மனுக்கு பால் ,தயிர் , மற்றும் இளநீர், குங்குமம், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள் மற்றும் அதனைதொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது.

மேலும் இந்த அபிஷேகத்தில்  சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி  தரிசனம் செய்தனா்.

—-கா. ரூபி.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.