பிரசித்தி பெற்ற நாச்சியார்கோவில் சீனிவாச ருமாள் கோயிலில் கல்கருட சேவை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானது கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில்
அமைந்துள்ள சீனிவாச பெருமாள் ஆலயம். இவ்வாலயத்தில் நடைபெறும் கல் கருட சேவை சிறப்பு பெற்றதாகும். ஏனையத் தலங்களில் நடைபெறும் கருட சேவையானது ,
மரத்தில் வடிவமைத்த கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருள்வார்.
ஆனால் இந்த தலத்தில் மட்டும் தனி சன்னதியில் மூலவராக அமைந்துள்ள 5 அடி உயரம்
உள்ள கல்லாலான கருடனே பெருமாளைச் சுமந்து சேவை சாதிப்பது சிறப்பாகும்.
இச்சிறப்பு வாய்ந்த கல் கருட சேவையைக் காண ஏராளமானோர் நாச்சியார்கோவிலில் குவிந்தனர்.
இவ்வாலயத்தில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் இந்த வருடம் வீதி உலா
நடைபெறாமல், கோவிலுக்குள்ளேயே கருட சேவை நடைபெற்றது.
—-ரெ.வீரம்மாதேவி
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்