நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளதையொட்டி திமுகவின் எம்.பி.கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இணைய வழியில் நடைபெற்ற இக்கூட்டமானது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நாடாளுமன்ற #MonsoonSession குறித்த கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்: மேகதாது அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்குள்ள நியாயமான உரிமையைக் காக்கவும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்துக் குரலெழுப்புவார்கள்.
ஒன்றிய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய சட்டமாக இருந்தாலும் மாநில உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தினையும் பாதுகாத்திடும் வகையிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு இருக்கும். தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாய் ஒவ்வொரு DMK MP-யும் செயல்படுவார்கள்!” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி குறுக்கே மேகதாதுடில் கர்நாடகா அரசு அணைகட்ட முயற்சி செய்து வருகிறது. இந்த சூழலில் வரும் ஜுலை 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இக்கூட்டத்தொடரின் போது, காவிரி பிரச்சனையை தமிழ் நாடு மற்றும் கர்நாடக எம்.பி.கள் எழுப்புவார்கள் என்று தெரிகிறது.




