இங்கிலாந்திற்கு 234 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா..!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 233 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 -வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 44 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்களுக்கு எடுத்துள்ளது.

இந்திய அணியில் விராட் கோலி 65 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 66 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி சார்பில் ஆர்ச்சர், அட்கின்சன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.