மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்திக்க தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்றடைந்தார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்கள் நாளை மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து முறையிட உள்ளனர்.
அதற்காக சென்னையிலிருந்து புறப்பட்ட தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்றடைந்தார். நாளை மத்திய நீர்வளத்துறை அமைச்சரை, துரைமுருகன் தலைமையிலான தமிழ்நாட்டு குழுவினர் சந்தித்து பேசுகின்றனர். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணைக்கட்ட அனுமதிக்கக்கூடாது என, அப்போது அவர்கள் வலியுறுத்தவுள்ளனர்.







