மேகதாது அணை விவகாரத்தில் தமிழர்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், படிக்காத மேதை என்றால் அது காமராஜர்தான் என்றும் தமிழ்நாடு கல்வியில் சிறந்து விலங்க வேண்டும் என அவர் எண்ணியதாகவும் கூறினார். மேகதாது அணை விவகாரத்தில் தமிழர்களின் உரிமை நிலைநாட்டப்படவேண்டும் எனவும், நாளை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்திக்க அதிமுகவினரும் செல்லவுள்ளதாகவும் அவர் கூறினார்.