எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் – இன்று பீகார் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பீகார் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை ஒரு அணியாக இணைந்து எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.…

எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பீகார் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை ஒரு அணியாக இணைந்து எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதற்கான ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பட்னாவில் நாளை நடைபெறுகிறது. அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், ஹேம்நாத் சோரன், உத்தவ் தாக்கரே, சரத்பவார், அர்விந்த் கேஜ்ரிவால், சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இதில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை விமானம் மூலம் பாட்னா புறப்பட்டுச் செல்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாட்னாவில் நடைபெறவுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில், கருணாநிதியின் பிரதிநிதியாக தாம் பங்கேற்க உள்ளதாக கூறியுள்ளார். ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பதற்கான இந்த முன்னெடுப்பு நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல விளைவைத் தரும் என்ற நம்பிக்கையை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.