மீனாட்சியம்மன் கோயில் யானை பார்வதிக்கு பிரத்யேக நீச்சல் குளம்..!

மதுரை, மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதி, நீச்சல் குளத்தில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தது அனைவரையும் கவர்ந்தது. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கோவில் யானை பார்வதிக்கு கண்ணில் வெண்புரை…

மதுரை, மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதி, நீச்சல் குளத்தில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தது அனைவரையும் கவர்ந்தது.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கோவில் யானை பார்வதிக்கு கண்ணில் வெண்புரை ஏற்பட்டு பார்வை குறைபாடு ஏற்பட்டது. இதையடுத்து, கால்நடை மருத்துவ நிபுணர்களால் யானைக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், யானையின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக, குளித்து மகிழ்ந்து விளையாடும் வகையில், 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டது.

இதனை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று திறந்து வைத்தார். இதையடுத்து யானை பார்வதி நீச்சல் குளத்தில் இறங்கி விபாப்பட்டது. தண்ணீரை கண்டதும் உற்சாகம் அடைந்த யானை பார்வதி நீச்சல் குளத்தில் ஓடி விளையாடி மகிழ்ந்தது. இந்த நிகழ்வு அங்கிருந்த னைவரையும் வெகுவாக கவர்ந்தது. மேலும் இதனை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் என அனைவரும் கண்டு ரசித்தனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.