3-வது அலையை கட்டுப்படுத்த மருத்துவ கட்டமைப்புகள் தயார்: மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்தும் மருத்துவக் கட்டமைப்புகள் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மீடியா கேமராமேன் அசோசியேஷன் மற்றும் பத்திரிகையாளர்கள் சார்பில், சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கல்லூரி…

தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்தும் மருத்துவக் கட்டமைப்புகள் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மீடியா கேமராமேன் அசோசியேஷன் மற்றும் பத்திரிகையாளர்கள் சார்பில், சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்துகொண்டார்.

அப்போது சமீபத்தில் மறைந்த நியூஸ் 7 தமிழ் ஒளிப்பதிவாளர் யுவராஜ் குடும்பத்தினருக்கு நிவாரண உதவித் தொகையை அவர் வழங்கினார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.