‘ஒன்றிய அரசு’ என அழைப்பது ஏன்? மனோ தங்கராஜ்

திராவிட இயக்கத்தின் கொள்கை அடிப்படையில்தான் ஒன்றிய அரசு என அழைக்கப்படுவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மத்திய அரசை…

திராவிட இயக்கத்தின் கொள்கை அடிப்படையில்தான் ஒன்றிய அரசு என அழைக்கப்படுவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைக்கும் விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் – இன் கருத்து குறித்து விமர்சித்தார்.

திராவிட இயக்கத்தின் கொள்கை பற்றி ஓபிஎஸ் ஏதும் தெரியாமல் பேசுவதாகக் கூறிய அமைச்சர் மனோ தங்கராஜ், மொழியியல் ரீதியாகப் பார்த்தாலும் தரவுகள் அடிப்படையில் பார்த்தாலும் ஒன்றிய அரசு, ஒன்றிய அமைச்சர் என கூறுவதில் எந்த தவறும் இல்லை எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.