மதிமுகவிற்கு 4 தொகுதிகளை ஒதுக்கீடு செய்த திமுக…!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலையோட்டி திமுக – மதிமுக இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 3 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்திலும் 1 தொகுதியில் தனி சின்னத்திலும் மதிமுக போட்டியிடுகிறது.

முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மதிமுக 6 தொகுதிகளில் போட்டியிட்டது.

திமுக கூட்டணியில் தேமுதிக, மநீம உள்ளிட்ட புதிய கட்சிகள் இடம் பெற்றுள்ள நிலையில் ஏற்கனவே உள்ள கட்சிகளும் தொகுதி எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.