சென்னையில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகால் பணிகளை மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
சென்னையின் பல்வேறு இடங்களில் பெருமழை பெய்யும் போது தண்ணீர் தேங்கி அந்த இடமே குளம்போல காட்சியளிக்கும் நிலை நீடித்து வருகிறது. மழை நீர் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்காமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து திருப்புகழ் ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் வெள்ள நீர் தேங்கும் இடங்களில் வடிகால் வசதி ஏற்படுத்தும் பணிகள் தொடங்கின.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் சென்னையில் கடந்த 19ம் தேதி முதல் மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இரண்டு நாள் மழைக்கே சில இடங்களில் தண்ணீர் தேங்கியது.
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் பெரும் பாதிப்புக்குள்ளாகும், இடுப்பளவு தண்ணீர் நிற்கும் கலைஞர் நகர், ராஜமன்னார் சாலை மழைநீர் கால்வாய் பணிகளை சென்னை மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர்ராஜா உடனிருந்தார்.
வடிகால் வசதிகளை விரைவில் ஏற்படுத்தி மழை நீர் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.