சீர்காழி கழுகுமலையாறு வாய்க்கால் தூர்வாரும் பணிகள் – ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் திணறும் அதிகாரிகள்!

சீர்காழி கழுகுமலையாறு வாய்க்கால் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் கழிவுநீர் கலப்பதை தடுக்க முடியாமலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமலும் திணறி வருகின்றனர். மயிலாடுதுறை,  சீர்காழி நகரின் வழியாக கழுகுமலையாறு வாய்க்கால் பாய்ந்தோடுகிறது .கொண்டல்…

சீர்காழி கழுகுமலையாறு வாய்க்கால் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் கழிவுநீர் கலப்பதை தடுக்க முடியாமலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமலும் திணறி வருகின்றனர்.

மயிலாடுதுறை,  சீர்காழி நகரின் வழியாக கழுகுமலையாறு வாய்க்கால் பாய்ந்தோடுகிறது .கொண்டல் பகுதியில் உருவாகும் இவ்வாய்க்கால் அகணி, கோயில்பத்து, சீர்காழி, தாடாளன் கோயில் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக பாய்ந்தோடுகிறது. இவ்வாய்க்காலின் மூலமாக சுற்றுவட்டார கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு மட்டுமில்லாமல் சுமார் 6000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இந்நிலையில் சீர்காழி நகரின் வழியாக செல்லும் இதன் கால்வாய் மிகவும் பாழடைந்து இருந்ததால் அதனை தூர்வார பொதுப்பணித்துறை சார்பில் திட்டமிடப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.நகரின் மேற்கு பகுதியில் பணிகள் முழுமையாக முடிந்துள்ள நிலையில் நகரின் மத்திய பகுதியில் சீரமைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார முயன்ற போது வாய்க்கால் மணலை தங்கள்
பகுதியில் கொட்ட அங்குள்ள குடியிருப்பு வாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மேலும் மண்டபங்கள், டீக்கடைகள் உள்ளிட்டவைகளின் கழிவுநீரை அகற்ற எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் காவல் நிலையத்தில் புகாரளிக்கின்றனர்.

இதனால் நகரின் மையப்பகுதியை விட்டுவிட்டு நகரின் கிழக்குப்பகுதியில் தூர்வாரும் பணியை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். வாய்க்காலை முழுமையாக தூர்வாரினால் மட்டுமே பலனளிக்கும் இல்லாவிடில் தூர்வாருவதில் பயனில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.