இந்த நன்னாள் சமூகத்தில் நல்லிணக்தை ஆழப்படுத்தட்டும் என பிரதமர் மோடி கிறிஸ்தவ மக்களுக்கு ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டு 3ம் நாள் உயிர்த்தெழும் நாளான ஈஸ்டர்
பண்டிகை உலகெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது. இதை நினைவு கூறும் வகையில்
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் விரதம் கடைபிடிப்பார்கள்.
இதன்அடுத்த நிகழ்வாக ஈஸ்டர் திருநாளுக்கு முந்தைய வியாழன் பெரிய
வியாழனாகவும், வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாகவும் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் கிறிஸ்தவ மதத்தினரால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ மத வழிபாட்டு தலங்களில் வழிபாட்டுகள் நடைபெற்று வருகிறது.
https://twitter.com/narendramodi/status/1644870899286327296
இந்நிலையில், பிரதமர் மோடி ஈஸ்டர் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், அனைவருக்கும் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்கள். இந்த நன்னாள் நமது சமூகத்தில் நல்லிணக்கத்தை ஆழப்படுத்தட்டும். சமுதாயத்திற்கு சேவை செய்யவும், தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிக்கவும் இது மக்களை ஊக்குவிக்கட்டும். இந்த நாளில் இயேசு கிறிஸ்துவின் பக்தி எண்ணங்களை நினைவில் கொள்வோம்’ என்று பதிவிட்டுள்ளார்.







