தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரளாவின் மலையாள தொலைக்காட்சி மாத்ரூபூமி புகழாரம் சூட்டியுள்ளது.
2021 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக பெரும்பான்மையாக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சியமைத்தது. அன்று முதல் இன்று வரை கொண்டு வரப்பட்ட பல திட்டங்கள், அறிவிக்கப்படாமல் களநிலவரத்தை கருத்தில் கொண்டு அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் என பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் குறித்து கேரளாவின் பிரபல மலையாள தொலைக்காட்சியான ‘மாத்ரூபூமி’ புகழாரம் சூட்டியுள்ளது.
தேர்தலில் வென்று பொறுப்பேற்றது முதல், வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றியது வரை மாத்ரூபூமி பட்டியலிட்டுள்ளது. சமீபத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை திறம்பட கையாண்டதாகவும், மக்களின் வாழ்வியலை கள யதார்த்தத்தில் புரிந்துகொண்டு சிறப்பாக முதலமைச்சர் பணியாற்றியதாகவும் மாத்ரூபூமி விரிவாக பேசியுள்ளது.
ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து முதல் 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக மாற்றிக்காட்டுவேன் என முதலமைச்சர் கூறியதை மாத்ரூபூமி தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது.









