முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

”கல்யாணம் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும்” – சிவகார்த்திகேயன்

ஆர்த்தியை திருமணம் செய்த பிறகு தான் தனக்கென தனி நிகழ்ச்சி கிடைத்தது என்றும், கல்யாணம் நமது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்றும் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆகஸ்ட் 16, 1947. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார். அறிமுக நாயகியாக ரேவதி நடித்துள்ளார். பல சின்னத்திரை பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சில தினங்களுக்கு முன்னர் இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.  கடந்த வாரம் இதன் ட்ரெய்லர் வெளியானது. சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய வீரன் ஒருவரின் வாழ்க்கையே இத்திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது இந்த ட்ரெய்லர் மூலமாக தெரிகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இதையும் படியுங்கள் : நாயகன் மீண்டும் வரார்….. – சிஎஸ்கே வெளியிட்ட ’தல’ தோனியின் மாஸ் எண்ட்ரி

இந்நிலையில் ஆகஸ்ட் 16, 1947 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர்கள் கௌதம் கார்த்திக், புகழ், இயக்குநரும் தயாரிப்பாளருமான ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், “1947 இது நமது சுதந்திரத்தின் கதை. ஒரு தனி மனிதனின் கதை. சுதந்திரத்துக்காக நிறைய பேர் கஷ்டப்பட்டு உள்ளனர். அதைத்தாண்டி வலி நிறைந்த விஷயங்களை பொன்குமார் கொடுத்துள்ளார். எல்லாருடைய உழைப்பும் இதில் தெரிகிறது. முதல் கதையையே, இப்படி ஒரு கதையாக தேர்வு செய்துள்ள இயக்குனர் பொன்குமார் சவாலை சந்திக்க தயாராக உள்ளார். சவாலை சந்திக்க தயாராக உள்ளவர், சாதிக்க தயாராக உள்ளார் என்று அர்த்தம். படத்தில் வேலை செய்த அனைவருக்கும் வாழ்த்துகள்.

கௌதம் கார்த்திக்கை சந்தித்த பிறகு தான் நான் கார்த்திக் அவர்களை சந்தித்தேன். கார்த்திக் அவர்களின் நடிப்பு தனித்துவமாக இருக்கும். பெரிய நடிகரின் பையன் என்று அவர் எப்போதும் காட்டி கொள்ளவில்லை. கேரக்டர் தான் வாழ்க்கையை முடிவு செய்யும்.

கல்யாணத்திற்கு பிறகு வாழக்கை மாறி இருக்கும். அது ஒரு பொறுப்பு என்று கூட சொல்லலாம். நான் ஆர்த்தியை திருமணம் செய்த பிறகு தான் எனக்கு என தனி நிகழ்ச்சி கிடைத்தது. கல்யாணம் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும். ஏ.ஆர்.முருகதாஸின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். எங்கேயும் எப்போதும் படத்தின் விழாவில் நான் தான் தொகுப்பாளர். இங்கு தான் அந்த விழா நடந்தது.

ஒருவர் வளர்ந்தால் சந்தேஷப்படுபவர்கள் இருப்பார்கள். வீரம் படத்தில் அஜித் சார் சொன்ன வசனம் போல தான். நம்முடன் இருப்பவர்களை நாம் பார்த்து கொண்டால் நம்மை மேலே உள்ளவன் பார்த்து கொள்வான். நான் மட்டும் வெற்றி பெறாமல் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்க வேண்டும் என்பதை இங்கு உள்ளவர்கள் சொல்லிக் கொடுத்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் டி.ராஜா

Web Editor

காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவால் ஒருவர் பலி

Web Editor

மு.க.ஸ்டாலினின் வெற்றியை பதிவு செய்து வாழ்த்திய சர்வதேச ஊடகங்கள்!

Halley Karthik