பத்துதல படத்திற்கு யுஏ சான்றிதழ்!

பத்துதல படத்திற்கான தணிக்கை சான்றிதழை ட்விட்டரில் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது.  கடந்த 2017ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்ற ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘மஃப்டி’ யின் ரீம்மேக் தான் பத்து…

பத்துதல படத்திற்கான தணிக்கை சான்றிதழை ட்விட்டரில் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது. 

கடந்த 2017ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்ற ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘மஃப்டி’ யின் ரீம்மேக் தான் பத்து தல. இப்படத்தில், சிம்பு கேங்ஸ்டராகவும் கவுதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார்.

இந்த படத்தினை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இயக்கியுள்ளார். பத்து தல திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப் போனது. இதையடுத்து கடந்த 18ம் தேதி இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த படத் வரும் 30ம் தேதி திரையில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்திற்கு மத்திய தணிக்கை குழு வழங்கிய யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. இதனை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும் தற்போது பத்துதல படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளது. இதையடுத்து சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.