சிஎஸ்கே அணி வீரர் தோனி மைதானத்திற்குள் பேட்டிங் செய்வதற்காக மாஸ் எண்ட்ரி கொடுக்கும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
2023ம் ஆண்டுக்கான 16வது ஐபிஎல் போட்டி வருகிற மார்ச் 31ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடர் மே 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்தப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.
இந்த ஐபிஎல் சீசனில் அதிரடி காட்டத் துடிக்கும் சிஎஸ்கே அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மார்ச் 3ம் தேதி, எம்.எஸ்.தோனி சென்னைக்கு விமானம் மூலம் வந்தடைந்தார். சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நாள்தோறும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதனைக் காண தோனியின் ரசிகர்களும் அங்கு குவிந்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : NCL 2023 : அதிரடி காட்டிய மதர் தெரசா பொறியியல் கல்லூரி; 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தல்
அவ்வப்போது தோனி பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ மற்றும் புகைப்படங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறது. இதனை காணும் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கின்றனர். தற்போது அந்த உற்சாகத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில், சிஎஸ்கே அணி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
’நாயகன் மீண்டும் வரார்’ என்று கேப்ஷனுடன் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், தோனி பேட்டிங் செய்வதற்காக மைதானத்திற்குள் வருகிறார். ரசிகர்கள் ஆரவரித்து அவரை வரவேற்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.







