தேர்தல் பரப்புரைக்காக வருகிற 30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ளதாக பாஜாகாவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
உதகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் நரேந்திர மோடி வருகிற 30-ம் தேதி தாராபுரம் வரவுள்ளதாகவும், இதை தொடர்ந்து ஏப்ரல் 2ம் தேதி மதுரை மற்றும் நாகர்கோவிலில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார்.
மதுரையில் வரும் 2ம் தேதி நடைபெறவுள்ள பரப்புரையில் பிரதமருடன், தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் சி.டி.ரவி தெரிவித்தார். தமிழகத்தில் பாஜக, அதிமுக, உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணி, கடுமையாக பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்ட சி.டி.ரவி, அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.







