மக்கள் பிரச்னை 48 மணிநேரத்தில் தீர்க்கப்படும் – மகேந்திரன்

மக்களின் கோரிக்கைகளுக்கு 48 மணி நேரத்தில் பதில் வழங்கப்படும் என கோவை சிங்காநல்லூர் தொகுதி மநீம வேட்பாளர் மகேந்திரன் வாக்குறுதி அளித்துள்ளார். கோவை சிங்நல்லூர் தொகுதிக்குட்பட்ட பீளமேடு பகுயியில் மக்கள் நீதி மய்யம் துணை…

மக்களின் கோரிக்கைகளுக்கு 48 மணி நேரத்தில் பதில் வழங்கப்படும் என கோவை சிங்காநல்லூர் தொகுதி மநீம வேட்பாளர் மகேந்திரன் வாக்குறுதி அளித்துள்ளார்.

கோவை சிங்நல்லூர் தொகுதிக்குட்பட்ட பீளமேடு பகுயியில் மக்கள் நீதி மய்யம் துணை தலைவரும் அக்கட்சியின் வேட்பாளருமான டாக்டர் மகேந்திரன் வாகனத்தில் சென்றவாறு வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக சிங்காநல்லூர் தொகுதிக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை எனக் குற்றம்சாட்டிய மகேந்திரன், மக்கள் நீதி மய்யம் வெற்றி பெற்றால் மக்களின் குறைகள் கேட்கப்பட்டு, 48 மணி நேரத்தில் பதில் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.