1993ஆம் ஆண்டு பயிற்சி பெற்ற காவலர்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொள்ளும் நிகழ்வு நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு காவலர் பயிற்சி பள்ளியில் 1993 ஆம் ஆண்டு பயிற்சி பெற்ற மணிமுத்தாறு பயிற்சி பள்ளி காவலர்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு
சந்தித்துக் கொள்ளும் முதல் சந்திப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 1993 ஆம் ஆண்டு தமிழக டிஜிபியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற டிஜிபி முத்து கருப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் பயிற்சி காவலர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்றபோது மொழி தெரியாமல்
அவர்களிடம் தர்ம சங்கடத்திற்கு ஆளானதை நினைவுகூர்ந்து தன்னுடைய
நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிக்கவும் : மாசி கிருத்திகை; பழனி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் காவலர் பயிற்சி பள்ளிகள் செயல்பட்டு
வந்தாலும், மிகவும் தலைசிறந்த பயிற்சி பள்ளியாக விளங்குவது நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மணிமுத்தாறு பயிற்சி பள்ளி.
இதில் 1993 ஆம் ஆண்டு பயிற்சி பெற்ற பயிற்சி காவலர்கள் அனைவரும் முதல் முறையாக 30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டனர். அப்போது பயிற்சி காவலராக இருந்து பின் நாளில் தமிழக டிஜிபியாக பதவி உயர்வு அடைந்த முத்து கருப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
தன்னிடம் பயிற்சி பெற்ற பயிற்சி காவலர்களை தன்னுடன் டெல்லிக்கு அழைத்து சென்ற போது மொழி தெரியாத பிரச்சனையால் அப்போது ஏற்பட்ட சில பிரச்சனைகளையும் கூறியதால் அந்த இடமே சிரிப்பு அலையில் நனைந்தது…
அதனைத் தொடர்ந்து முன்னாள் காவல்துறை இயக்குனர் வைகுந்த் தங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் பொழுது கண்ணீர் விட்டு அழுதது பழைய
மாணவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
– யாழன்







