நடிகர் விஜய் – இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ’ஜனநாயகன்’. இப்படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, பிரேமலூ புகழ் மமிதா பைஜூ, பாபி தியோல், கெளதம் மேனன், பிரியாமணி, நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் விஜயின் கடைசி படம் என்பதால் இப்படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் நாளை (டிச: 27) தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி நடிகர் விஜய் இன்று தனது தாயுடன் மலேசியா சென்றார் . மலேசிய வந்தடைந்த விஜய்க்கு அவரது ரசிகர்கள் ஆராவார வரவேற்பு அளித்தனர்.
ஜனநாயகன் படத்தில் இருந்து இதுவரை வெளியான, ’தளபதி கச்சேரி’, ’ஒரு பேரே வரலாறு’ ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து ஜனநாயகன் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ‘செல்ல மகளே’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்பாடலை விஜய் பாடியுள்ளார். மேலும் விவேக் வரிகள் எழுதியுள்ளார்.
Close your eyes.. Let Thalapathy’s soulful voice do the rest ♥️#ChellaMagale
🎵 https://t.co/NTOxg8Nl8qLyrics by @Lyricist_Vivek 🧨#JanaNayaganThirdSingle#JanaNayagan#JanaNayaganPongal#JanaNayaganFromJan9#Thalapathy @actorvijay @KvnProductions #HVinoth @hegdepooja… pic.twitter.com/IfFF7KbA9I
— KVN Productions (@KvnProductions) December 26, 2025







