தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் தொடர்ந்து நீடித்து வருகிறது
தலைநகர் டெல்லியில், இதுவரை இல்லாத அளவுக்கு காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், தேவையற்ற கழிவுகளை தீயிட்டு கொளுத்துவதாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையாலும் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் இன்று காற்று தரக் குறியீடு எண் 339 (AQI) ஆக பதிவாகியுள்ளது. தொடர்ந்து டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையிலேயே நீடிக்கிறது.
ஏற்கனவே, “அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்களை தவிர பிற வாகனங்கள் டெல்லி மாநகர் பகுதிக்குள நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, காவல்துறை இந்த விஷயத்தில் தீவிரமாக கண்காணித்து வருகிறது” இந்நிலையில், இதயம் அல்லது நுரையீரல் நோய் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் கடுமையான உழைப்பை குறைத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.







