திருச்சி அருகே தாயின் சடலத்தின் மீது அமர்ந்து ஆத்மசாந்தி பூஜை செய்த அகோரி, தனது சிஷ்யை-ஐ திருமணம் செய்துள்ளார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்த அகோரி குரு மணிகண்டன், காசியில் பயிற்சி பெற்று, ஜெய் அகோர காளி சிலையைப் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வருகிறார். இவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு, தனது தாயின் சடலத்தின் மீது அமர்ந்து, ஆத்மசாந்தி பூஜை செய்தது அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதேபோல, அண்மையில் உயிரிழந்த சிஷ்யரின் உடல் மீது அமர்ந்தும் பூஜை நடத்தினார். இந்நிலையில், அகோரி குரு மணிகண்டன், தனது சிஷ்யையான, கொல்கத்தாவை சேர்ந்த பெண் அகோரி, ப்ரியங்காவை திருமணம் செய்துள்ளார்.
அகோரியின் திருமணத்தை முன்னிட்டு, சிறப்பு யாகம் நடைபெற்றபோது, சக அகோரிகள், சங்கொலி எழுப்பி, தம்புரா மேளம் அடித்தனர். மேலும் திருமணம் முடிந்த பிறகு, மீண்டும் யாகம் நடத்தப்பட்டு, தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.








