மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசிகொடை திருவிழா!

மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயிலில் மாசிகொடை திருவிழாவின் போது நடைபெற்ற ஒடுக்கு பூஜையில் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெண்களின் சபரிமலை என்று…

மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயிலில் மாசிகொடை திருவிழாவின் போது நடைபெற்ற ஒடுக்கு பூஜையில் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயிலில், ஆண்டுதோறும் மாசிகொடை திருவிழா பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம்,  இதையடுத்து 10 நாட்களுமே பெண்கள் இருமுடி கட்டி பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

அதேபோல் இந்த வருடம் மாசிகொடை திருவிழா கடந்த ஐந்தாம் தேதி துவங்கிய நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான ஒடுக்கு பூஜை, 11 வகையான உணவு பதார்த்தங்களை கொண்டு கோயில் அர்ச்சர்களால் பவானியாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு படைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.

—கா ரு்பி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.