2023-2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் 20-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட சில முக்கிய அறிவிப்புகளை பட்ஜெட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்க: 50,000 பேர் +2தேர்வை எழுதவில்லை : அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் இன்று அவசர ஆலோசனை
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருடன் நிதியமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாலர் முருகானந்தமும் முதல்வரை சந்திக்க உடன் சென்றுள்ளார். இதில், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா