மானாமதுரை பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் டிக்கெட் எடுத்த பயணிக்கு அபராதம் விதித்த செக்கர் மற்றும் மற்ற பயணிகளை பேருந்திலேயே காக்க வைத்த நடத்துநரால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை, மானாமதுரை பேருந்து நிலையத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து மானாமதுரை வழியாக பொன்னமராவதிக்கு சென்ற அரசு பேருந்து மானாமதுரை
பேருந்து நிலையம் வந்தவுடன் பயணிகளிடம் டிக்கெட் செக் செய்த செக்கர் பயணி ஒருவரிடம் டிக்கெட் கேட்டுள்ளார். அவருடைய பைகளில் தேடிக் கொண்டிருந்தபோது, செக்கர் நீங்கள் டிக்கெட் எடுக்கவில்லை என கூறி அபராதம் விதிக்க வேண்டும் என்று அலுவலகத்திற்கு வர கூறினார்.
மேலும் அவருடன் நடத்துநரையும் கூட்டி சென்றார். அரசு பேருந்தில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருந்தனர். இதனால் பேருந்தை உடனடியாக எடுக்காமல் ஒரு பயணிக்காக மற்ற பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மற்ற பயணிகள் ஒருவருக்காக நிறுத்திவிட்டு செல்கிறீர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு நாங்கள் சீக்கிரம் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் செக்கர் கூட்டிச்சென்று விசாரணை
நடத்தி 100 ரூபாய் அபராதம் விதித்து ரசிது எழுதினார். உடனே அந்தப் பயணி பேக் முழுவதும் தேடி டிக்கெட்டை கண்டுபிடித்து செக்கரிடம் போய் கொடுத்து விட்டு சென்று விட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவசரப்பட்டு வேகமாக அபராதத்தை எழுதிய செக்கர், உடனே நடத்துநரிடம் இந்த ரசீதை பெற்றுக் கொண்டு 100 ரூபாய் கொடுங்கள் என கேட்டுள்ளார். மேலும் ஆங்காங்கே சோதனை செய்யாமல் பேருந்து நிலையத்தில் வந்து அமர்ந்து கொண்டு சோதனை செய்வது வாடிக்கையாயாகி விட்டது என்றும் இதனால் மற்ற பயணிகள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ரெ. வீரம்மாதேவி