விவசாயம் செழிக்க எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு படையலிட்டு வழிபட்ட கிராமத்தினர்!

மானாமதுரையில் மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் எல்லை தெய்வத்திற்கு கிராம மக்கள் மண் சட்டிகளில், கறிசோறு படையல் வைத்து  வழிபட்டனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அண்ணாதுரை சிலை அருகே மானாமதுரையின் எல்லை தெய்வமாக எல்லைப்…

மானாமதுரையில் மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் எல்லை தெய்வத்திற்கு கிராம மக்கள் மண் சட்டிகளில், கறிசோறு படையல் வைத்து  வழிபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அண்ணாதுரை சிலை அருகே மானாமதுரையின் எல்லை தெய்வமாக எல்லைப் பிடாரி அம்மன் கோயில் உள்ளது.  புரட்டாசியில் செவ்வாய் சாட்டுதல் விழா கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.
அதன்படி இந்தாண்டு விழாவை முன்னிட்டு மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் கிராமத்தார்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்புக்கட்டி விரதம் இருந்து வருகின்றனர்.

மண் சட்டிகளில் பணியாரம்,  கறிச்சோறு, நாட்டுக்கோழி,  கருவாடு,  ஆட்டுகறி,  முட்டை, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை தங்களது வீடுகளில் தயாரித்து மண்சட்டியில் தீப்பந்த விளக்கு ஏற்றி விளக்கு அனையமால் மக்கள் மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியிலிருந்து நகரின் முக்கிய வீதிகளின்* வழியே ஊர்வலமாக வந்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.

பின்னர் கோயில் எல்லை தெய்வமான எல்லைபிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகங்களும், ஆராதனைகளும் நடத்தினர்.  மேலும்  கிருஷ்ணராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும்  எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு மற்றும் அசைவ விருந்து படையல் வைத்து வழிபட்டனர்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.